நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் |
மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியமின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி, திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று(செப்., 25) நடந்தது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று அவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
இளையராஜா பேசும்போது, ‛‛எனக்கும், பாலுவுக்கும் இடையேயான நட்பு பற்றி அனைவரும் அறிவர். சர்வசாதரணமாக பழக்கூடிய உண்ணதமான மனிதர். எங்கள் நட்பில் எந்த விரிசலும் இல்லை. தொழில் விஷயத்தில் என்ன இப்படி பாடுற என நான் பேசி இருக்கிறேன், அவரும் சரியாக வரவில்லை என்று பேசியிருப்பார். தொழில் வேற. ஆனால் நட்பு வேற. எங்கள் நட்புக்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.
பாலு மருத்துவமனையில் ஆபத்தாக இருந்தபோது நான் ஒரு வீடியோவில் பாலு சீக்கிரம் எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் என பேசியிருந்தேன். இந்த வீடியோவை எஸ்பிபி நினைவு திரும்பிய சமயத்தில் அவரிடம் காண்பித்துள்ளார் அவரது மகன் சரண். இதை பார்த்ததும் கண்கலங்கி, என் வீடியோவிற்கு முத்தமிட்டுள்ளார். யாரையாவது பார்க்கணுமா என அவரிடம் கேட்டபோது ராஜா வந்தா வர சொல்லுனு எஸ்பிபி சொல்லியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை போதாதா, அவருடைய மனசுல எனக்கு எந்த இடம் கொடுத்துள்ளார் என்று. அந்த மாதிரியான நட்பு எனக்கும், அவருக்கும்.
நீங்கள் கேட்கும் ஒவ்வொரு பாடலிலும் அவரும் இருக்கிறார், நானும் இருக்கிறேன் என்பது தான் உண்மை. இது என்றும் மாறாது. அவர் மறைந்து ஓராண்டு என்பது ஒரு நிமிடம் போல் நடந்துவிட்டது. காலம் யாருக்காகவும் காத்திருக்காது. நடக்க வேண்டிய நேரத்தில் நடப்பவைகள் நடந்து கொண்டே இருக்கும்'' என்றார்.