ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் தமன்னா. 2006ல் வெளிவந்த 'கேடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. ஆனால், 'கல்லூரி' படத்தின் மூலம்தான் தமிழில் பிரபலமானார். அதன்பிறகு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 2019ல் விஷால் நடித்த 'ஆக்ஷன்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் ஹிந்தி, தெலுங்கில் நடித்து வருகிறார் தமன்னா.
சமீபத்திய பேட்டி ஒன்றில் மன அழுத்தத்தில் இருந்ததால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால், எந்த மாதிரியான மன அழுத்தம், உடல்நலனுக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து அவர் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.
உடல்நலன் கருதி தற்போது ஆர்கானிக் உணவு வகைகளை மட்டும் தமன்னா உட்கொண்டு வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாராம். அனேகமாக, அடுத்த இரண்டு வருடங்களில் அவர் திருமணம் செய்து கொள்வார் என்கிறார்கள்.