'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்குத் திரையுலகின் மிக சீனியர் ஹீரோவான அக்கினேனி நாகேஸ்வரராவின் 99வது பிறந்தநாளை நேற்று தெலுங்கு திரையுலகத்தினர் கொண்டாடினர். அவரது மகனான நடிகர் நாகார்ஜுனா, அவரது அப்பா ஸ்டைலில் பஞ்சகச்ச வேட்டி அணிந்து அப்பா செயின், மோதிரம், வாட்ச் ஆகியவற்றை அணிந்து அப்பாவை நினைவு கூறும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
நாகார்ஜுனா காலையில் பதிவிட்ட வீடியோவிற்கு மாலையில் வாழ்த்து தெரிவித்திருந்தார் மருமகள் சமந்தா. “நாகார்ஜுனா மாமா, இது மிகவும் அழகாக உள்ளது,” என்று '#ANRLIvesOn என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார்.
மேலே சொன்ன டுவீட் சமந்தா இரண்டாவதாகப் பதிவு செய்தது. முதலில் 'மாமா' என்ற வார்த்தையை சேர்க்க மறந்து அவர் டுவீட் செய்திருந்தார். அதற்கு ரசிகர்கள் 'மாமா' வார்த்தை எங்கே எனக் கேட்டதும், அந்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டு, பின்பு 'மாமா' என்ற வார்த்தையைச் சேர்த்து டுவீட் செய்தார்.
இதையும் சமந்தா, நாக சைதன்யா விவகாரத்து சர்ச்சையில் சேர்த்து பேசி வருகிறார்கள் ரசிகர்கள்.