ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

மறைந்த முன்னாள் முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்ற பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்ட படம் 'தலைவி'. படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் வழக்கம் போல சில போஸ்டர்களை வெளியிட்டு ஆரம்ப கட்ட பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், படம் வெளியாவதற்கு முன்பு எந்த விதமான பரபரப்பையும் ஏற்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. இந்திய ஊடகங்கள் பலவும் அவருக்கான முக்கியத்துவத்தைக் கொடுத்து பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளன. மாநில அளவில் அரசியலில் இருந்தாலும் தேசிய அளவில் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.
ஆனால், அவரது பயோபிக் படம் வந்து எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழிலாவது ஓரளவுற்கு வசூலாகியிருக்கிறது படம். தெலுங்கு, ஹிந்தியில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியில் இந்த வார இறுதியிலும், தமிழ், தெலுங்கில் இன்னும் இரண்டு வாரத்திற்குப் பிறகு இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அப்போதாவது படம் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.