‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

தெலுங்குத் திரையுலகின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர் நாகேஸ்வர ராவ். பல அற்புதமான படங்களில் வெற்றிகரமான படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் அவர் கதாநாயகனாக நடித்து 1953ல் வெளிவந்த 'தேவதாஸ்' படம் 68 வருடங்கள் கழித்து காதல் படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறது.
2014ம் ஆண்டு மறைந்த நாகேஸ்வரராவின் 99வது பிறந்த தினத்தை தெலுங்கு திரையுலகினர் இன்று கொண்டாடி வருகிறார்கள். அப்பா நாகேஸ்வரராவை நினைவு கூறும் வகையில் அவரது விருப்ப ஆடையான 'பஞ்சகச்ச வேஷ்டி' அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மகன் நாகார்ஜுனா.
அதில், “எனது அப்பாவை பஞ்சகச்ச வேட்டியில் ரசித்துப் பார்ப்பேன். இப்போது நான் அணிந்திருக்கும் 'பொன்டுரு காதி' எனது அப்பாவின் அபிமான ஆடை. அவரது நவரத்தினா செயின், மோதிரம் ஆகியவற்றையும் அணிந்துள்ளேன். நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் எனக்கும் சீனியர். அவரது அபிமான வாட்ச்தான் எனது அபிமான வாட்ச்சும் கூட. இவை அனைத்தையும் அணியும் போது அவர் என்னுடனேயே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பஞ்சகச்சத்தின் நேர்த்தியை உங்களுக்குக் கொண்டு வருவதுதான் எங்களது முயற்சி, ஏஎன்ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
'பங்கராஜு' என்ற படத்தில் இப்படி தனது அப்பாவின் உடைமைகளை அணிந்து நடித்து வருகிறார் நாகார்ஜுனா.