2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கொரோனா முதல் அலை பரவிய போது மற்ற முன்னணி ஹீரோ நடிகர்களை விட வில்லன் நடிகரான சோனு சூட் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலவிதமான உதவிகளைச் செய்தார். அவரைப் பற்றி தினமும் மீடியாக்களில் ஏதாவது ஒரு செய்தி வெளிவந்தது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்தது.
இரண்டாவது அலை வந்த போதும் அவரது உதவி தொடர்ந்தது. ஆந்திராவில் சில ஊர்களில் ஆக்சிஜன் பிளான்ட்டுகளைக் கூட அவர் அமைத்துத் தந்தார். இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அவர் சுமார் 20 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வருமான வரித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல போலியான சான்றுகள் மூலம் கணக்கில் வராத பணம் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். மேலும் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நன்கொடையிலும் வெளிநாட்டு ஒழுங்குமுறை பங்களிப்பு சட்டத்தின்படியும் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
நடத்தப்பட்ட சோதனையில் 1.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். 11 லாக்கர்களையும் முடக்கியுள்ளார்களாம். மும்பை, லக்னோ ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாலிவுட்டில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சோனு சூட் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.