மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அது ஏன் என்பது குறித்து அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
சைக்கோ படம் பார்த்தேன், மிஷ்கின் உழைப்பு பிரமாதமாக இருந்தது. படம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் கதை சொல்லியிருந்தார். ஒரு நாள் யதேச்சையாக போனில் கூப்பிட்டேன். வாங்க பேசலாம் என்றார், போனேன். அவர் பேச பேச எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
நான் ஓசோவோட டிராவல் பண்ணினேன் என்றார். என்னடா டிராவல் இது அவர் படம்தானே பண்றார் என்று நினைத்தேன். 8 மணி நேரம் அவருடன் பேசிய பிறகுதான அவரை புரிந்து கொள்ள முடிந்தது.
பிசாசு கதை கேட்டேன். அந்த கதை ரொம்ப ஆழமாக இருந்தது. படத்தோட கேரக்டர்களை உருவாக்கி வைத்திருந்த விதம் பிரமிக்க வைத்தது. எனக்கு ஏதாவது கொடுங்க ஒரு இரண்டு நாள் பண்ணிக் கொடுக்கிறேன் என்றேன். அவரது படத்தில் பணியாற்றியது பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்காகத்தான் என்றார்.