தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு மாதங்களே… எந்தப் படம் வெளியாகும் ? | ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்' | நடிகையான அமைச்சர் மகள் | ஓடிடியில் சாதனை புரியும் 'துரந்தர்' | கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்பு | பிளாஷ்பேக்: நீதிமன்றத்தில் எதிரிகள், படப்பிடிப்பில் நண்பர்கள் | 50வது நாளில் 'சிறை' | சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியின் புதிய படம் தள்ளிப்போகிறது? | சசிகுமார் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் ரிலீஸ் செய்கிறது | இனி டாக்டர் ஸ்ரீலீலா |

அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாளி (மலையாளம்) நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இப்போது தன் பெயரை அருணாச்சலம் வைத்தியநாதன் என்று மாற்றிக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இது கணவன் மனைவிக்கு இடையிலான உளவியல் ரீதியான பிரச்சினையை பேசுகிற படம்.
இதில் கணவராக வெங்கட்பிரபுவும். மனைவியாக சினேகாவும் நடிக்கிறார்கள். தனுஷின் பட்டாஸ் படத்திற்கு பிறகு சினேகா நடிக்கும் படம். வெங்கட் பிரபு கடைசியாக கசடதபற படத்தில் நடித்திருந்தார்.
சினேகா நடிப்பது பற்றி அருணாச்சலம் வைத்தியநாதன் கூறியதாவது: ஆரம்பத்தில், நான் சினேகாவிடம் பேசியபோது, அவர் தயங்கினார், அவர் இதற்கு முன்பு அத்தகைய கேரக்டரை செய்யவில்லை என்று சொன்னார். ஆனால் நான் அவரிடம் கதையை விவரித்தவுடன், அவர் சிரித்துக் கொண்டே, நான் இதைச் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்கு பிறகு பிரசன்னா மற்றும் சினேகாவிடம் நல்ல நட்பில் இருக்கிறேன். அதானல் தான், நான் சினேகாவுடன் மீண்டும் பணியாற்ற முடிந்தது. இந்த படத்தில் சினேகா ஒரு வித்தியாசமான அம்மாவாக நடிக்கிறார். என்றார்.