ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் | மதுரை மண்ணின் மைந்தன்... ‛சொக்கத்தங்கம்' விஜயகாந்த் பிறந்ததினம் இன்று | ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் கல்யாணி பிரியதர்ஷினின் 2 படங்கள் | பிரேமலு நடிகருக்கு காய்ச்சல் : படப்பிடிப்பை ரத்து செய்த மோகன்லால் |
மலையாள நடிகரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுரேஷ் கோபி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக திருச்சூர் மாவட்டம் புதூருக்கு சென்றார். அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் மரங்களை வனத்துறையினர் அகற்றவில்லை என அப்பகுதி மக்கள் சுரேஷ் கோபியிடம் புகார் அளித்தனர்.
அவர் ஒல்லூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சி.ஜே ஆண்டனியை அழைத்து இந்த புகாரை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி கவனிக்கும்படி கூறினார். அப்போது அந்த சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கோபிக்கு சல்யூட் அடிக்கவில்லை. இதை கவனித்த சுரேஷ் கோபி நான் ஒன்றும் மேயர் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் எனக்கு சல்யூட் அடிக்க மாட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த சப் இன்ஸ்பெக்டர் பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் இதுகுறித்து விளக்கம் அளித்த சுரேஷ் கோபி "சல்யூட் அடிக்க அந்த அதிகாரியை கட்டாயப்படுத்தவில்லை. அவரை சார் என்று மரியாதையுடன் தான் அழைத்தேன். நான் ஒரு எம்.பி, எனக்கு போலீசார் மரியாதை தர வேண்டும் என்பது ராஜ்யசபை செயலகம் கூறுகிறது. போலீசின் மரியாதை என்பது சல்யூட்தானே" என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கேரள போலீஸ் அதிகாரிகள் சங்கம் கூறியிருப்பதாவது: எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு காவல்துறை வணக்கம் செலுத்த வேண்டும் என்று கேரள காவல்துறையின் நிலைப்பாட்டு உத்தரவில் கூறப்படவில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மட்டுமே வணக்கம் செலுத்த வேண்டும். என்று கூறியுள்ளது