ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகை சுவாசிகா தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் ‛லப்பர் பந்து' படம் அவரை பிரபலமாக்கியது. இந்த படத்திற்கு பிறகு சுவாசிகாவை தேடி பல பட வாய்ப்புகள் குவிகிறது. தமிழை தாண்டி தெலுங்கிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் ராம் சரணுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சுவாசிகாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு இன்னும் வயதாகி விடவில்லை. இப்போது எனக்கு 33 வயதுதான் ஆகிறது என கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் சுவாசிகா.