மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகர் வடிவேலு. முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதனிடையே தான் எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் இல்லை என கூறியுள்ள வடிவேலு, ‛என் பெயரில் உலா வரும் சமூகவலைதள கணக்குகள் அனைத்தும் போலி' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடிவேலுவுடன் சுராஜ் இயக்கும் படத்தில் நடிகை ப்ரியா பவானிசங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் டுவிட்டர் பக்கத்தில் வடிவேலு உடன் தான் உள்ள ரசிகர்கள் உருவாக்கிய படத்தை பகிர்ந்த ப்ரியா பவானி சங்கர், வடிவேலு உடன் நடிப்பதை கிட்டதட்ட உறுதிப்படுத்தியுள்ளார். அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள ப்ரியாவுக்கு, இப்படம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி தரலாம்.