பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, குருவாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில்களில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் வந்தார்.
அப்போது, அவர் காரை கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனுமதித்தனர். இந்த படங்களும் வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகின. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த 3 ஊழியர்களை, கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.