ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
தமிழில் 'அறிந்தும் அறியாமலும், இளவட்டம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நவ்தீப். அஜித் நடித்த ஏகன் படத்தில் அவரது தம்பியாக நடித்தார். அந்தப் படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் தன்னுடன் நடித்த நவ்தீப்புடன் அஜித் இன்னும் அன்புடன் பழகி வருவது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அஜித்துடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “இன்ஸ்பிரேஷன் இப்படித்தான் தோற்றமளிக்கும், திரையிலும் திரைக்குப் பின்னாலும்,” என்று குறிப்பிட்டுள்ள நவ்தீப் மேலும், “இந்த மனிதர் தூய்மையான அன்பு கொண்டவர். 'ஹாய்' என அவர் அழைக்கும் குரல் உங்களை வியக்க வைக்கும். நான் அவரை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவருடைய எளிமை, அறிவார்ந்த குணம் ஆகியவற்றை அனுபவிப்பது ஒரு பேரின்பம். உண்மையிலேயே ஒரு அற்புதமான மனிதர். அதற்காகத்தன் 'தல',” எனப் பாராட்டியுள்ளார்.
அஜித்துடன் நவ்தீப் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் எடுத்துக் கொண்டவை. சில பைக் ரேசர்களுடன் அஜித் அப்போது பைக் பயணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்டவை. அவற்றைத்தான் இவ்வளவு நாட்கள் கழித்து பகிர்ந்துள்ளார் நவ்தீப்.
இதுநாள் வரை இப்படி ஒரு ரிடுவீட், லைக்குகளை நவ்தீப் வாங்கியிருக்காத அளவிற்கு அஜித் ரசிகர்கள் அவரது டுவீட்டை கொண்டாடி வருகிறார்கள்.