வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' |
80, 90களின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கார்த்திக். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு அன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக் தான். கார்த்திக் அவருடன் 'சோலைக்குயில்' படத்தில் கதாநாயகியாக நடித்த ராகினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கவுதம், காயின் என இரு மகன்கள் உள்ளனர்.
மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் கவுதம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது 'பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் தன்னுடைய 32வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அம்மா ராகினி, தம்பி காயின் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் கவுதம்.
தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை கார்த்திக் அதிகமாக வெளியிட்டதில்லை. கவுதம் புகைப்படங்கள் கூட அவர் நடிகரான பிறகுதான் வெளிவந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுதம் தனது அம்மா, தம்பி ஆகியோரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.