இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
இளம் வயதில் இசையில் சாதனை படைத்து வருபவர் லிடியன் நாதஸ்வரன். இவரின் தந்தையான இசையமைப்பாளர் வர்ஷன் புதிதாக ஒரு கான்சப்ட்டை அறிவித்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், ‛‛சில ஆண்டுகளுக்கு முன் நான் மதித்த ஒரு பெண்மணிக்கு என்னுடைய அன்பின் உணர்வை ஒரு பாடலாக உருவாக்கி அதற்கு மெட்டமைத்து வாத்தியக் கோர்வைகளுடன் உயர் தரத்தில் பதிவு செய்து இசைப்பாடலாக தயாரித்து எனது அன்பின் பரிசாகக் கொடுத்தேன். கண்ணீர் மல்க அதனைக் கேட்டு ரசித்த அவர் இன்று வரை அதனைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து தினமும் கேட்டு வருவதாகச் சொன்னார்.
இந்த உணர்ச்சிகரமான நிகழ்வே, எனக்கு நாம் எல்லோருமே ஒருவரை ஒருவர் வாழ்த்திப் பாடினால் என்ன? என்ற கருத்தை தீவிரமாக யோசிக்கத் தூண்டியது. என்னுடைய இந்த நோக்கத்தை "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்" என்று பெயரிட்டு ஒவ்வொரு தனி மனிதருக்கும் அன்பு, பாசம், கருணை, காதல், பிரிவு, நட்பு என எல்லா உணர்வுகளுக்கான இன்னிசைப் பாடல்களையும் இதே போன்று பிறந்தநாள், திருமண விழா, பூப்புனித வைபவம், அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதர சகோதரிகள் தினம் போன்ற சர்வதேச தினங்களுக்கும் இன்னிசைப் பாடல்களாகவும் தயாரித்து தரும் பணியைத் தொடங்கியிருக்கிறேன்.
ஒரு சில கடுமையான சூழ்நிலையால் பிரிந்திருக்கும் உறவுகளோ அல்லது நட்புகளோ தங்களது நியாயங்களை ஒரு பாடலாக வெளிப்படுத்தி அனுப்பும் பட்சத்தில் இசையும், தமிழும் இணைந்து அவர்களது அபிப்பிராய பேதங்களை முற்றிலும் நீக்கி மீண்டும் அவர்களை ஒன்றிணைக்கும் என்பதையும் நான் ஆழமாக நம்புகிறேன். இன்றைய அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப காலத்தில் இத்தகைய பரிசினை மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் விரும்பும் போது கண்டும் கேட்டும் மகிழவும் முடியும் என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பான அம்சமாகும்.
இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் அது தொடர்பான இடம்பெற வேண்டிய தகவல் மற்றும் நினைவுக் குறிப்புகளையும், காணொளி வடிவங்களையும் நாங்கள் பரிந்துரைக்கும் தொழில்நுட்ப வடிவில் நேரிலேயோ அல்லது இணையத்தின் மூலமாகவோ சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவற்றை முறையாகத் தொகுத்து மனதை விட்டு நீங்காத இன்னிசைப் பாடலாக மாற்றி உங்கள் விருப்பப்படி ஆடியோ அல்லது வீடியோ வடிவில் மிக உன்னதமான தொழில்நுட்பத்தில் வழங்கத் தயாராக இருக்கிறேன். இதற்கென மிக நியாயமான கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறேன். அதே சமயத்தில் திரைத்துறையின் பிரபலமான பாடலாசிரியர்கள் மூலமாக உங்களது இத்தகைய உணர்வுகள் பாடலாக வெளிப்பட வேண்டும் என்று விரும்பினால் அதற்கான சிறப்புக் கட்டணத்துடன் அத்தகைய உங்களது ஆசையையும் நிறைவேற்றித்தரத் தயாராக இருக்கிறேன்.
இந்தத் திட்டத்தை எனது வாழ்வின் லட்சியமாக நினைத்து இதற்கென்று உன்னதமான பாடலாசிரியர்களையும் மிகச் சிறந்த வாத்தியக் கலைஞர்கள் குழுவையும் ஒன்றிணைத்திருக்கிறேன். உலகத்தரத்திலான ஒளி மற்றும் ஒளிப்பதிவுக் கூடத்தை நிர்மாணித்திருக்கின்றேன். இந்த நல்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு அன்பையும் சமாதானத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு எல்லோரும் இந்நாட்டு மன்னராக நிறை வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.