விரைவில் 'அயலான்' டீசர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | கங்குலி பயோபிக் சினிமாவாக உருவாகிறது | இயக்குனர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷின் சகோதரி | ஜெயிலர் படத்தின் அப்டேட் தந்த தமன்னா | லியோ படத்துடன் கேப்டன் மில்லர் மோதுமா? | மாவீரன் படத்தை கைப்பற்றிய லைகா | 'மல்லி பெல்லி' : சொந்தக் கதையில் நடித்துள்ள நரேஷ் - பவித்ரா | ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட வெண்பா : சம்யுக்தா சொல்வது பொய்யா? |
பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ். நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான இவர், அங்கு வளர்ந்து வரும் இளம் நடிகராக உள்ளார். ரே, சுப்ரமணியம் பார் சேல், தேஜ் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் இன்று இவர் ரைடு சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்திற்குள்ளானது. இதில் பலத்த அடிபட்ட சாய், சுயநினைவின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடக்கிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிகழ்வு சாய் தரம் தேஜ், சிரஞ்சீவி குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சாய் சரம் தேஜ் விபத்தில் சிக்கிய செய்தியை கேட்டதுமே அவரது தாய் மாமாக்களில் ஒருவரும், நடிகருமான பவன் கல்யாண் உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்தார். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சாய் தரம் தேஜ் விரைந்து குணமாக கடவுளை வேண்டுவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.