சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் |
சென்னை : எனக்கு எண்ட் கார்டே கிடையாது. என் மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய், என நடிகர் வடிவேலு கூறினார்.
இயக்குனர் ஷங்கர் தயாரித்த, இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிரச்னையில் சிக்கிய காமெடி நடிகர் வடிவேலு, தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் போனது. கடந்த 10 ஆண்டுகளில் ஆறு படங்களில் மட்டுமே நடித்த அவர், நான்காண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. கொரோனா தாக்கத்தின் போது, இயக்குனர் சுராஜ் உருவாக்கிய, நாய் சேகர் கதையில், வடிவேலு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை லைக்கா தயாரிக்கிறது.
படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை சுராஜ் மற்றும் வடிவேலு ஆகியோர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்தனர். வடிவேலு அளித்த பேட்டி: இந்த மாதிரி துன்பத்தை வேறு யாருமே அனுபவிக்க முடியாது. வைகைப்புயலாகிய என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயலே அடித்து விட்டது. துாக்கமே வராத நோயாளி ஒருவர் மருத்துவரை அணுகிய போது, அவர், அருகே நடக்கும் சர்க்கஸ் சென்று பப்பூன் செய்யும் காமெடியை பார்த்தால் மனப்பாரம் இறங்கி நன்றாக துாக்கம் வரும் என்றாராம். ஆனால் அந்த நோயாளியோ, அந்த பப்பூனே நான் தான் என்பாராம். அந்த நிலையில் தான் நான் இருந்தேன்.
எனக்கு வாழ்வு கொடுத்தது லைக்கா தயாரிப்பாளர் சுபாஷ்கரன். எனக்கு மட்டுமல்ல மக்களுக்கும் அவர் நல்லது செய்துள்ளார். என் பயணம் இனி நகைச்சுவை பயணமாகவே இருக்கும். கடைசி வரை மக்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பேன். தமிழக முதல்வருக்கும் என் மனமார்ந்த நன்றி. அவரை பார்த்த நாள் முதல் எனக்கு நல்லது நடக்கிறது. சீக்கிரம் படங்களில் நடிக்க வேண்டும் என முதல்வர் கூறியது மறக்க முடியாது.