Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாத்த மோஷன் போஸ்டர் கலக்குது... வசனம் அனல் தெறிக்குது...!

10 செப், 2021 - 18:32 IST
எழுத்தின் அளவு:
Annaatthe-Motion-Poster-out-:-Fans-celebration

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, யோகி பாபு, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. தீபவாளி வெளியீடு என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதால் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. திருவிழா பின்னணியில் கோயில் மணிகள், அரிவாள்கள் நிறைந்து இருக்க, பட்டு வேஷ்டி, சட்டையில் கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் ரஜினி. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து மாலை 6 மணியளவில் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவும் வெளியானது. அதில் ‛‛நாடி நரம்பு முறுக்க முறுக்க, ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க, அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க, தொடங்குது ஓம்கார கூத்து என ரஜினியின் அனல் தெறிக்கும் வசனம் பேசுகிறார். கூடவே ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு பைக்கில் ரஜினி பயணம் செய்வது போன்றும் கையில் அரிவாள் ஏந்தியபடியும், வீடியோவின் கடைசியில் கோபத்துடன் ரஜினி நடந்து செல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

ரசிகர்கள் இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். வெளியான 15 நிமிடங்களிலேயே யு-டியூப்பில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றது. ஜனரஞ்சகமான குடும்ப படமாகவும், ஆக் ஷன் படமாகவும் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது. தீபாவளிக்கு படம் ரிலீஸாகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
முடக்கறுத்தான் கதை என்ன?முடக்கறுத்தான் கதை என்ன? எனக்கு எண்ட் கார்டே இல்லை ; இனி ஷங்கர் சகவாசமே வேண்டாம் : வடிவேலு எனக்கு எண்ட் கார்டே இல்லை ; இனி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Rajagopal - Chennai,இந்தியா
14 செப், 2021 - 18:07 Report Abuse
Rajagopal இன்னுமாடா உலகம் இவனை நம்புது
Rate this:
navin - trichy,இந்தியா
11 செப், 2021 - 13:18 Report Abuse
navin கிராமத்து படமான சின்ன கவுண்டர் படம் சூப்பரா ஓடுனப்போ அத பாத்துட்டு இயக்குனர் R.V.உதயகுமார் கிட்ட இம்ப்ரெஸ் ஆகி அதே ட்ரெண்டுல அவரு டைரக்ஷன்ல நடிச்ச படம் எஜமான்.. ஆனா சின்ன கவுண்டர் போல சூப்பரா இல்லாம எஜமான் படம் சுமாரா தான் இருந்துச்சு.. விசுவாசம் பாதிப்புல எடுத்திருக்க இந்த படம் அது மாதிரி ஆகாம நல்லா இருந்தா சரி..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in