தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
சித்த மருத்துவர் கே.வீரபாபு எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும், ‛முடக்கறுத்தான்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இப்படத்திற்கு சிற்பி இசையமைக்க, பழனிபாரதி பாடல் எழுதுகிறார். இவர்கள் கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் சேர்ந்துள்ளது.
வீரபாபு பேசியதாவது: சின்ன வயதிலேயே சினிமா மீது ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க நினைத்தேன், அது நிஜமாகி உள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதையே ‛முடக்கறுத்தான்'. குழந்தைகளுக்கான ஒரு அமைப்பு, திட்டம் உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.