இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி |
பாக்கியலெட்சுமி சீரியல் வெற்றிகரமாக 300-வது எபிசோடை கடந்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலெட்சுமி சீரியல் உள்ளது. தற்போது இந்த சீரியல் 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளதை முன்னிட்டு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன் புரோமோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அந்த புரோமோவில் நாம் காண்பது பாக்கியலெட்சுமி சீரியலை பார்த்து இன்ஸ்பையர் ஆன கூட்டுக்குடும்பத்தின் நபர்கள் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதில் பேசும் ஒரு வயதான தயார் பாக்கியலெட்சுமி சீரியலில் பாக்கியாவின் கதாபாத்திரத்தை பார்த்து இண்ஸ்பையர் ஆகி தான், அவர் ஆட்டோ ஒட்டுவதாகவும், உணவு சேவை வழங்கி வருவதாகவும் கூறினார். இந்த நெகிழ்ச்சியான பேச்சுடன் ஆரம்பமாகும் புரோமோ மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பாக்கியலெட்சுமி 300 சிறப்பு நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்று மதியம் 2 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.