பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான் | தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் |
சந்தானம் நடித்த தில்லுக்குதுட்டு இரண்டு பாகங்களையும் இயக்கிய ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம் இடியட். நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஊர்வசி, அக்சரா கவுடா ,மயில்சாமி, கருணாகரன்,ரவிமரியா, ஆனந்தராஜ், சிங்கம் முத்து, உள்பட பலர் நடித்துள்ளனர்.
விக்ரம் செல்வா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா பட்டாசார்யா ஒளிப்பதிவு செய்துள்ளார் . தில்லுக்கு துட்டு பாணியில் காமெடி ஹாரர் படமக உருவாகி உள்ளது. கொஞ்சம் பேண்டஸி சமாச்சாரங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரு வீட்டில் பேயிடம் மாட்டிக் கொள்கிறவர்களின் காமெடி கலாட்டாதான் படத்தின் கதை. இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இம்மாதம் இடியட் திரைப்படம் திரைக்கு வருகிறது.