என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் நடுவன். சரண்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பரத் ஹீரோ. பைரவா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அபர்னா வினோத் ஹீரோயின். இவர்கள் தவிர கோகுல் ஆனந்த் பாலா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தரண்குமார் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர் சரண்குமார் கூறியதாவது: மனதார நேசிக்கும், நம்பும் நபர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியும்போது, என்ன செய்வீர்கள்? அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வீர்கள்? அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களா அல்லது அவர்களின் குற்றத்தை சொல்லி எதிர்ப்பீர்களா? என்பதுதான் படம்.
வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் நிவாஸ் என்கிற இளைஞனின் கதை. நிவாஸாக பரத் நடித்திருக்கிறார். நடுவன் என்றால் மத்தியதர வாழ்க்கை வாழ்கிறவன். மிடில் கிளாஸ் மேன் என்று பொருள்.
தன்னை ஏமாற்றியவர்களை கண்டுபிடிக்க முயல்கிறார். கதாநாயகன் அந்த பாதையில் செல்லும்போது, சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நேசித்து நம்பியவர்களின் ஏமாற்றுதல் மற்றும் வஞ்சத்தை அவர் கண்டுபிடித்து சமாளிக்க வேண்டும். இந்த அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில், அவர் செல்லும் போது கதை ஒரு திரில்லராக மாறுகிறது. ஆனால் இந்த பயணத்தில் அவர் வெற்றி பெறுவாரா, அல்லது அவர் நேசிப்பவர்களுக்காக தனது அறியாமைக்கு அடிபணிவாரா? என்பதே கதை. என்றார்.