2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மெர்சல் படத்திற்கு பிறகு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடித்தார் வடிவேலு. ஆனால் சில பிரச்னைகளால் படப்பிடிப்பு நின்றுபோனது. அதையடுத்து அந்த படத்திற்கு தனக்கு பல கோடி நஷ்டமாகிவிட்டது. அதை வடிவேலு தான் ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். இந்த விவகாரத்தில் வடிவேலு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் இந்த பிரச்னை தீர்ந்தது. இதனால் மீண்டும் புதிய படங்களில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கும் வடிவேலு மீண்டும் வெளி உலகில் அதிகமாக காணப்படுகிறார். சில பிரபலங்கள் வடிவேலுவை சந்தித்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில் தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசனும் வடிவேலுவை சந்தித்துள்ளார். அப்போது அவரிடத்தில், எனது பெயரை ஒரேயொரு முறை உங்க ஸ்டைலில் சொல்லுங்க என்று அவர் கேட்க, அகல்யா வெங்கடேசன் என்ற அந்த பெயரை தனது பாணிலேயே கிண்டலாக அவரை கலாய்த்தபடி சொல்கிறார் வடிவேலு. இந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் அகல்யா. இதற்கு இந்த மனுஷன இப்படி பார்த்து எவ்வளவு நாளாச்சு என ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.