பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என தனது கிளைகளை பரப்பி வருகிறார். அவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜகமே தந்திரம் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. ஆனால் அதை பற்றி எல்லாம் தனுஷ் கவலைப்பட்டது போல தெரியவில்லை. அடுத்து நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அடுத்தப்படியாக தனுஷ் நடிப்பில் தி கிரே மேன்(ஹாலிவுட்), அத்ரங்கி ரே(ஹிந்தி), மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இவை ஒவ்வொன்றாக ரிலீஸாக உள்ளது. சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இயங்கும் தனுஷ் தனது திரைப்படங்கள் பற்றிய அறிவிப்புகளை பகிர்ந்து வருவார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை ஏற்கனவே பதிவு செய்து இருந்தார். இந்நிலையில், இரண்டு நாய்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனுஷ் பதிவு செய்திருக்கிறார். மேலும் கிங், காங் என்று பெயர் வைத்திருக்கும் நாய்களை தனது குடும்பத்திற்கு வரவேற்பதாக பதிவு செய்திருக்கிறார்.