'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

சமீபத்தில் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்த பாலன், கவுதம் மேனன், பாலாஜி சக்திவேல், ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகிய 11 இயக்குனர்கள் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர். இவர்கள் புதிய படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இதில் நாயகனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படமாக இது தயாராவதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் கனவு படமான இரும்புக்கை மாயாவி தான் இந்த படம்.
தற்போது ஞானவேல் இயக்கும் ஜெய்பீம், பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. இவற்றுள் ஜெய்பீம் படம் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ள சூர்யா, அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.