4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் |

கொரோனா இரண்டாவது அலை தளர்வுகளுக்குப் பிறகு கடந்த வாரம் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தியேட்டர்களை 50 சதவீத இருக்கைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இருப்பினும் தமிழகம் முழுவதும் இன்னும் தியேட்டர்கள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. புதிய படங்கள் எதுவும் வெளியாகாததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. சில ஆங்கில, ஹிந்தி, தெலுங்குப் படங்களை வைத்துக் கொண்டு சில தியேட்டர்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் இந்த வாரம் முதல் சில புதிய படங்கள் தியேட்டர்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார வெள்ளிக்கிழமை செப்டம்பர் 3ம் தேதியன்று 'தேவதாஸ் பிரதர்ஸ்' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில புதிய படங்கள் வெளியாகும் என்றும் தெரிகிறது.
அதற்கடுத்த வாரம் செப்டம்பர் 9ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்', செப்டம்பர் 10ம் தேதி கங்கனா ரணவத், அரவிந்த்சாமி நடித்துள்ள 'தலைவி' படம் ஆகியவை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் வருவதால் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, அந்த வாரத்தில் மேலும் சில படங்களை வெளியிடும் வேலைகளும் நடந்து வருகிறதாம்.
அடுத்த சில வாரங்களில் தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்க வேண்டும் என தியேட்டர்காரர்கள் தயாரிப்பாளர்களை அணுகிக் கொண்டிருக்கிறார்களாம்.