இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
இங்கிலாந்து நாட்டின் இளவரசியாக இருந்தவர் டயனா. எளிய குடும்பத்தில் பிறந்து தன் அழகால், திறமையால் இளவரசி ஆனவர். மன்னர் குடும்பத்தை தாண்டி அவர் இளவரசி ஆனதால் மன்னர் குடும்பம் அவரை ஆதரிக்கவில்லை. காதலித்து மணந்த இளவரசர் சார்லசும் அவருக்கு ஆதரவாக இல்லை. சினிமா நடிகை அல்லாமல் உலகையே தன் அழகால் ஈர்த்த டயானா 25 வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை தற்போது ஸ்பென்சர் என்ற பெயரில் சினிமாவாக தயாராகி வருகிறது. இதில் டயானாவாக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீக்வார்ட் நடிக்கிறார்.
இந்த படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட மணமகளுக்கான வெள்ளை உடையில் இருக்கும் டயானா முதுகை காட்டியபடி தலையணையில் முகம் புதைத்து அழுவதாக இந்த போஸ்டர் சித்தரிக்கிறது. ஒட்டுமொத்த டயனாவின் வாழ்க்கையை இந்த ஒரு புகைப்படம் சித்தரிக்கிறது என்று கோடிக் கணக்கான மக்கள் இந்த போஸ்டரை புகழ்ந்து வருகிறார்கள்.
இந்த படம் அடுத்த மாதம் 3ம் தேதி டொரோண்டா சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முறையாக திரையிடப்படுகிறது. அதன் பிறகு உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது.