மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
புரியாத புதிர், ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் 'யாருக்கும் அஞ்சேல்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் மைக்கேல். நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது. இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
விஜய் சேதுபதி - சந்தீப் கிஷன் இருவரும் முதன் முறையாக மைக்கேல் படத்தில் இணைந்திருப்பதால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானவுடனே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.