‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
இயக்குனரும், தயாரிப்பாளருமான ஷங்கர் மற்றும் நடிகர் வடிவேலு இடையிலான பிரச்னை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர், எஸ்.பிக்சர்ஸ் சார்பில், இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் தயாரித்தார். சிம்புதேவன் இயக்க, வடிவேலு நாயகனாக நடிக்க படம் உருவானது.
ஆனால் இடையில் இயக்குனருக்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பல கோடிகளை இழந்ததாக கூறிய ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்பிரச்னை முடியும் வரை வடிவேலுவால் புதுப்படங்களில் கமிட் ஆக முடியாமல் போனது.
தற்போது இப்பிரச்னையை பேசி சுமூகமாக முடித்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை: தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஷங்கர், 23ம் புலிகேசி -2 படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக வடிவேலு மற்றும் ஷங்கரிடம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமாக தீர்வு கண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.