செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்ததாக விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள லாபம் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்திலேயே நாட்டுப்புற ஆடல் கலைஞராக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். அடுத்ததாக தற்போது பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வரும் சலார் படத்தில், இதுவரை தோன்றியிராத ஒரு புதிய கெட்டப்பில் நடித்திருக்கிறாராம். இந்த தகவலை அவரது ஒப்பனைக் கலைஞர் அம்ரிதா தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார்
இதுகுறித்து அவர் கூறும்போது : ஸ்ருதிஹாசனுடன் பணிபுரிவதற்கு எந்த ஒரு ஒப்பனைக் கலைஞரும் மறுப்பு தெரிவிக்கவே மாட்டார். அந்த அளவுக்கு ஸ்ருதி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர். அதனால் தான் சலார் படத்தில் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் முதல் நாள் வரை அவர் எந்த வகையான உடைகளை அணிய போகிறார், அவருக்கு எந்தவிதமான கெட்டப் மாற்றம் செய்ய இருக்கிறோம் என்பது பற்றி எல்லாம் அவருக்கு தெரியாது. படப்பிடிப்பின்போது அவருக்கு கெட்டப்பில் நிறைய மாற்றம் செய்த போது ஆச்சரியப்பட்டுப் போனார். பர்ஸ்ட் லுக் வெளிவரும்போது ரசிகர்களுக்கும் இந்த ஆச்சரியம் தொற்றிக்கொள்ளும் என கூறியுள்ளார்.