சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
2023ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியான படம் சலார். இதில் அவருடன் ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும் நல்ல வசூலை பெற்றது. இதன் காரணமாக 2025ம் ஆண்டில் சலார் 2 படம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதனால் தி ராஜா சாப் படத்தை அடுத்து சலார 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு அதற்கு முன்னதாக ஹனுமன் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறாராம் பிரபாஸ். அதனால் இந்த படத்தில் நடித்து முடித்த பிறகுதான் சலார் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரசாந்த் தற்போது ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதன் காரணமாகவும் இவர்களின் சலார் 2 கூட்டணி தள்ளிப்போகிறதாம்.