மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! |
நடிகரும், இயக்குனர் சிவாவின் தம்பியுமான பாலா தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கடந்த பல வருடங்களாக மலையாள திரையுலகிலேயே நிரந்தரமாக தங்கி படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல சில வருடங்களாகவே அவர் திருமணம் மற்றும் விவாகரத்து குறித்த சர்ச்சைகளில் அடிக்கடி பரபரப்பு செய்திகளில் அடிபட்டு வருகிறார். ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த சந்தனா, அடுத்ததாக பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ், மூன்றாவதாக கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என மூவரை திருமணம் செய்து கொண்டு மூவரிடம் இருந்தும் பிரிந்தார் பாலா.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் பாலா. கேரளாவில் கொச்சியில் தான் வசித்து வந்த இருப்பிடத்தையும் மாற்றி வேறு ஒரு இடத்திற்கு சென்று தற்போது வசித்து வருகிறார். இவரது திருமணம் குறித்து ஆரம்பத்தில் எதுவும் விமர்சிக்காமல் இருந்த மூன்றாவது மனைவி டாக்டர் எலிசபெத் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு பாலா தன்னை எப்படி ஏமாற்றினார் என்றும், ஏற்கனவே தன்னுடன் பழகிய சமயத்திலேயே பாலாவின் வீட்டில் வேறு சில பெண்களும் வசித்தனர், அவர்களுக்கு தனது வீட்டையே எழுதித் தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தார் என்பது போன்று பலர் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அடுக்கி உள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலாவின் தற்போதைய மனைவி கோகிலாவும் பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும் போது, “என்னுடைய மாமா (பாலா) உங்களை பற்றிய எந்த ஒரு கசப்பான கடந்த காலத்தையும் பற்றி சொல்ல வேண்டாம் என்று தான் பொறுமை காத்து வருகிறார். இப்போது எங்களுக்கு திருமணம் ஆகி நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். நீங்கள் தேவையில்லாமல் அவரை சீண்டி வருகிறீர்கள். என் மாமாவிடமிருந்து பிரிந்து நீங்கள் ரகசியமாக இன்னொரு டாக்டரை பதிவு திருமணம் செய்து கொண்டீர்களே. அது பற்றிய தகவல்களை வெளியிட்டு விட்டு நீங்கள் பேசுங்கள்..
என் மாமாவிடம் இருந்து பிரிந்து சென்ற பிறகு இப்போது ஒன்றை வருடம் கழித்து மீண்டும் ஏதோ உரிமை உள்ளவள் போல வந்து சண்டை போடுகிறீர்கள்.. இதனால் என் மாமா தான் ஏதோ நிறைய குற்றங்கள் செய்தவர் போல தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள்.. உங்களைப் பற்றிய கடந்த கால விஷயங்கள் என்னிடம் ஆதாரப்பூர்வமாகவே இருக்கிறது.. அவற்றை வெளியிடுவதற்கு நீண்ட நேரம் ஆகாது..
இனி என் மாமாவை பற்றி நீங்கள் பேச வேண்டும் என்றால் உங்களுடைய தற்போதைய டாக்டர் கணவரை பற்றிய தகவல்களையும் வெளியிட்டு விட்டு அப்புறம் பேசுங்கள்... நான் சொல்வது ஒன்றுதான்.. நான் என் கணவருடன் நிம்மதியாக வாழ்கிறேன்.. நீங்களும் தற்போதைய உங்கள் கணவருடன் நிம்மதியாக வாழுங்கள்.. இதையும் மீறி நீங்கள் அடுத்து மாமாவை பற்றி ஏதாவது தவறாக செய்தி பரப்ப நினைத்தால், அதை நானும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.