டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா | எனது கேரியரையே மாற்றிய படம் டிராகன் : கயாடு லோஹர் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு | இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா | சலார் 2வை தள்ளி வைத்த பிரபாஸ் | நிம்மதியா வாழ விடுங்க : நடிகர் பாலாவின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது மனைவி எச்சரிக்கை | எம்புரான் ரிலீஸில் புதிய சிக்கல் : லைகாவை ஒதுக்கிவிட்டு ரிலீஸ் செய்ய திட்டம்? | ஜவான் படத்தை மறுத்தது ஏன்? : மலையாள இளம் நடிகர் விளக்கம் | லோகேஷ் 40 ரஜினி 50 அமீர்கான் 60 : கூலி படக்குழு உற்சாக கொண்டாட்டம் | குட் பேட் அட்லி டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஆதிக் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷோபனா, சத்யராஜ் ஆகியோர் நடிக்க, முதன்முறையாக நடிகர் நாகார்ஜுனாவும் பாலிவுட் நடிகர் அமீர்கானும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ரஜினி உடன் நடித்துள்ளனர். நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நேற்று (மார்ச் 14) லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். அந்தவகையில் அவர் 40வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
அது மட்டுமல்ல நடிகர் அமீர் கானுக்கும் நேற்று தான் அவரது 60வது பிறந்த நாள் என்பதால் லோகேஷ் கனகராஜ் ஆமீர்கான் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அது மட்டுமல்ல ஹோலி பண்டிகையான நேற்று ரஜினிகாந்த் என்கிற 'நடிகருக்கும்' 50-வது பிறந்தநாள்.
ஆம்.. சிவாஜி ராவ் என்கிற பெயருடன் பாலச்சந்தரின் சினிமா பாசறையில் நுழைந்த ரஜினிக்கு 1975ல் ஹோலி பண்டிகை அன்று தான் ரஜினிகாந்த் என்கிற பெயரை சூட்டினார் பாலச்சந்தர். அன்று தான் ரஜினிகாந்த் என்கிற நடிகர் பிறந்தார். இப்போது அவருக்கு வயது 50. இந்த மூவரின் முக்கியமான நாட்களும் ஒரே நாளில் அமைந்ததால் படக்குழுவினர் அதை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.