நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் டீசர் வெளியான நிலையில் அதுதொடர்பான மேக்கிங் காட்சிகளை மூன்று நிமிட வீடியோ வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த வீடியோவில், அஜித் குமார் நடிக்கும் பல மாஸான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாடல் காட்சி, ஆக்ஷன் காட்சி என மாறுபட்ட கெட்டப்பில் அவர் நடித்துள்ள பலதரப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வீடியோ முடிவில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மார்ச் 18ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.