சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கு முன்பு கார்த்தி, விஜய், கமல் என பல நடிகர்களின் காம்பினேஷனில் பணியாற்றியுள்ள லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் மூலம் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து இருக்கிறார். அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது.
தற்போது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நேற்று தன்னுடைய 39 வது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா ஆகியோருக்கு அவர் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.
அதேபோல் கூலி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள அமீர்கானும் நேற்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள லோகேஷ் கனகராஜ், அவரை தான் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.