என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிரபாஸின் 21வது படத்தை மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தாவை அணுகியதாகவும், ஆனால் அவர் சில காரணங்களால் மறுத்து விட்டதாகவும் ஒரு தகவல் பேசப்பட்டு வந்தது. ஏற்கனவே நாக் அஸ்வின் இயக்கிய மகாநடி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சமந்தா. இந்த நிலையில் அதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் சமந்தா.
“இயக்குனர் நாக் அஸ்வினிடம் எனக்கு ஏன் உங்களது படத்தில் ஒரு கதாபாத்திரம் கொடுக்கவில்லை என்று இப்போது அவருக்கு மெசேஜ் செய்து கேட்கப் போகிறேன், அப்படி இல்லை என்றால் இந்த படத்தில் எனக்காக நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்றும் கேட்கப் போகிறேன்” என கூறியுள்ளார் சமந்தா. இதன் மூலம் இப்போது வரை பிரபாஸ் படத்தில் சமந்தா ஒப்பந்தம் ஆகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.