2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு உக்ரைன் நாட்டில் நடைபெற்று கடந்த வாரம் படக்குழுவினர் ஐதராபாத் திரும்பினர். அங்கு விடுபட்ட காட்சிகள் சிலவற்றின் படப்பிடிப்பு கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நடந்து வந்தது.
நேற்றுடன் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. அது குறித்து ஆர்ஆர்ஆர் குழு, “படத்தின் கடைசி ஷாட் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு புலியும், சிறுத்தையும் புறப்பட்டுச் சென்ற காட்சி,” என அவர்கள் இருவரும் காரில் தனித் தனியே சென்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்கள்.
அக்டோபர் 13ம் தேதியன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.