இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
தேசிய விருது பெற்ற இயக்குனரான பாலா, தன் படங்களில் ஹீரோவாக நடிப்பவர்களின் உருவங்களை ஒட்டு மொத்தமாக, மாற்றி விடுவார். இவர் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோக்களின் தோற்றங்களை பார்த்தால், "அவரா... இவர் என, கேட்க தோன்றும். குறிப்பாக, பாலா படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் ஹேர்ஸ்டைல், மிகவும் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் பரதேசியில் நடித்திருக்கும், அதர்வாவும், இந்த வித்தியாசமான ஹேர்ஸ்டைலிலிருந்து தப்ப வில்லை. "ஏன் இப்படி என, பாலாவிடம் கேட்டால்,"என் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு, அந்த படத்தில், ஹீரோக்கள் என்ன கேரக்டர்களில் நடிக்கின்றனரோ, அந்த கேரக்டராகவே தெரிய வேண்டும். படம் பார்க்கும், ரசிகர்களுக்கு, "இவர் விக்ரம், இவர், அதர்வா என்ற நினைப்பு வந்து விடக் கூடாது. அதனால், என் ஹீரோக்களுக்கான ஹேர்ஸ்டைலை, நானே வடிவமைக்கிறேன் என்கிறார்.