'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
தமிழகத்தில் ஆக., 23 முதல் 50 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனாவால் சினிமா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலையில் ஏப்ரல் மாதக் கடைசியில் இருந்து தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை விரைவில் திறக்க அரசு அனுமதி கொடுக்கும் என்ற நம்பிக்கை திரையுலகத்தில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் பேசி வந்தனர்.
இந்நிலையில் ஆக., 23 முதல் தியேட்டர்கள் 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேசமயம் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தியேட்டர்கள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஓடிடி பக்கம் சாய்ந்த சில தியாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களைத் தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அதேசமயம் முன்பு போல வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்பில்லை. மேலும் மக்களும் கொரோனா அச்சத்தை தாண்டி தியேட்டர்களுக்கு வருவார்களா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். தற்போதைய சூழலில் முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டரில் வெளியான ஓரளவுக்கு ரசிகர்களும் வருவார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.