ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

லிங்குசாமி தெலுங்கில் இயக்கி வரும் படத்தில் நதியா நடித்து வருகிறார். இதில் ராம் பொத்ததேனி, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துவருகிறது.
இந்த படப்பிடிப்பில கலந்து கொள்கிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நதியாவுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. சில நாட்கள் நடித்து விட்டு மும்பைக்கு திரும்பியபோதும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்ட உடன். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் தாய், தந்தை மற்றும் 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நதியா கூறியிருப்பதாவது: நான் ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டேன். பிறகு எனக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரியவில்லை. என்னோட அப்பா, அம்மா, வீட்ல வேலை செய்றவங்கனு நாலு பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. அனைவரும் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்கிறார் நதியா.