18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
ஏ.ஆர்.ரகுமான் கதை மற்றும் பாடல்கள் எழுதி, இசை அமைத்து, தயாரித்த படம் 99 சாங்ஸ். இந்த படம் நாளை (ஆகஸ்ட் 22 ) கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் 1.00 மற்றும் மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தான் நேசிக்கின்ற பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு, 100 பாடல்களை பாட வேண்டும் என்ற பெண்ணின சவாலை ஏற்று அதற்காக பல சிரமங்களை அனுபவித்து சாவலில் வெற்றி பெறும் இளைஞனின் கதை. பென்னி தயாள், ஸ்வேதா மோகன், அரிஜித் சிங் உட்பட, பல பிரபல இந்திய இசை உலக நட்சத்திரங்கள் இதில் பாடி இருக்கிறார்கள்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: எனது திரைப்படமான 99 சாங்ஸ் , கலர்ஸ் தமிழ் போன்ற தமிழகத்தின் பிரபல சேனலில் ஒளிபரப்பப்படவிருக்கிறது என்று அறிந்து நான் மிகவும் உற்சாகமும், ஆனந்தமும் கொண்டிருக்கிறேன். தயாரிப்பில் எனது முதல் திரைப்படமாக இது இருப்பதால், பார்வையாளர்களும், ரசிகர்களும் இந்த திரைப்படமாக்கல் அனுபவத்தை எந்த அளவிற்கு அனுபவித்து ரசிக்கவிருக்கின்றனர் என்று அறிய மிகவும் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் நான் இருக்கிறேன்.
இந்த படத்திற்கான பாடல்களை எழுதியது ஒரு இசைக்கலைஞராக எனது இசை திறனை மேலும் உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசித்து, அனுபவிப்பதோடு, இப்பாடல்களின் இசையையும் உணர்ந்து இனிய அனுபவம் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். என்று கூறினார்.