பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் நடிகைகள் தான் முன்னணி நடிகைகளாக இருப்பார்கள் என்பது எழுதப்படாத ஒரு விதி. எப்படியாவது தங்கள் பெயர்களும் ஏதோ ஒரு விதத்தில் செய்திகளில் வந்தால் சிறப்பு என சிலர் நினைப்பார்கள்.
ஒரு நடிகையோ அல்லது நடிகரோ படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக வரும். அவர்கள் நடிக்காமல் சும்மா இருந்தால் சினிமாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஆனால், இந்த சமூக வலைத்தள காலத்தில் தங்களைப் பற்றிய அப்டேட் இருந்து கொண்டிருக்க வேண்டும் என சில நடிகைகள் நாள்தோறும் விதவிதமான போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களைப் பகிர்கிறார்கள். அவை டிவிக்கள் வரையிலும் வந்துவிடுகிறது.
அந்த பார்முலாவை இப்போது பலரும் ஆரம்பித்துவிட்டார்கள். 'துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை' என இரண்டு தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அனு இம்மானுவேல். இரண்டு படங்களிலுமே கவர்ச்சி காட்ட முடியாத கதாபாத்திரங்கள் தான் அவருக்குக் கிடைத்தன.
அவரது கைவசம் தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் 'மகா சமுத்திரம்' படம் மட்டுமே உள்ளது. அதனால், கவர்ச்சி காட்டினால் இயக்குனர்களும் புதிய பட வாய்ப்புகளைத் தருவார்கள் என சில கவர்ச்சிப் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஆரஞ்ச் நிற உடையில் அவர் காட்டியிருக்கும் கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது.




