பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தெலுங்கு நடிகர் ராம்சரண் - கியாரா அத்வானியை வைத்து தனது புதிய படத்தை அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறார் ஷங்கர். தமன் இசையமைக்கும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் பணிகள் முடிந்து விட்டதால் மற்ற டெக்னீஷியன்கள், நடிகர்- நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராம்சரணைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை அப்படத்திற்கு ஒப்பந்தம் செய்ததை தானே அறிவித்தார் ஷங்கர். அவரைத் தொடர்ந்து தற்போது அஞ்சலியையும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபகாலமாக தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த வந்த அஞ்சலி சமீபத்தில் தான் தன்னை கற்றது தமிழ் படத்தில் அறிமுகம் செய்த ராம் இயக்கும் புதிய படத்தில் நிவின்பாலியுடன் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் அந்த இரு மொழிப் படத்தை அடுத்து, இப்போது ஷங்கர் இயக்கும் மூன்று மொழிப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.