ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி ஷோக்களிலேயே அனைத்திற்கமான பிக்பாஸாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட் அடித்து வருகிறது. மற்ற மொழிகளிலை போலவே தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் பெற்ற தொடர் வெற்றியையடுத்து, சீசன் 5 மிக விரைவில் வெளியாகவுள்ளது.
சீசன் 5-க்கான புரோமோ படப்பிடிப்பும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என இணையத்தில் ஒரு பட்டியல் வலம் வருகிறது.
அதில், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, சுனிதா, ரம்யா கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஜிபி முத்து, செய்தி வாசிப்பாளர் கண்மணி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. எனினும் இது குறித்து பிக்பாஸ் குழு அல்லது தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. .