இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தற்போது 'வலிமை, மாநாடு' என இரண்டு படங்களுக்கும் மாறி மாறி வேலை செய்து கொண்டிருக்கிறார். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க, உருவாகி வரும் 'வலிமை' படத்தின் முதல் சிங்கிள் 'நான் வேற மாறி' பாடல் சமீபத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்க உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் முதல் சிங்கிள் 'மெஹர்சிலா' இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது.
'வலிமை' படத்தின் அப்டேட் வேண்டும் என்று தான் ரசிகர்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், 'வலிமை' படத்தின் அப்டேட்டுடன் 'மாநாடு' பட அப்டேட்டையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சீக்கிரமே 'வலிமை, மாநாடு' படங்களின் அடுத்த சிங்கிள் வர உள்ளது, யுவன் ரெடி செய்துவிட்டார்,” என வெங்கட் பிரபு பதிலளிக்கிறார். அவர் விளையாட்டாகச் சொன்னாரா, அல்லது உண்மையாகச் சொன்னாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.