ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
'பாகுபலி' இரண்டு பாகங்களுக்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அக்டோபர் 13ம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
'நட்பு' என்ற தலைப்பில் ஐந்து மொழிகளில் பிரமோஷன் பாடல் ஒன்றை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு யு டியுபில் வெளியிட்டார்கள். ஐந்து மொழிகள் என்பதால் பாடல் மிகவும் சென்சேஷனாக அமைந்து அதிகப் பார்வைகளைப் பெற்று யு டியூப் வரலாற்றில் பெரும் சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதிகபட்சமாக தெலுங்குப் பாடல் 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஹிந்திப் பாடல் 11 மில்லியன், தமிழ்ப் பாடல் 4 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், கன்னடத்தில் 1.7 மில்லியன், மலையாளத்தில் 1.5 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. பத்து நாட்களில் இவ்வளவு குறைவான பார்வைகள் இப்பாடல்களுக்குக் கிடைத்திருப்பதில் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
அதனால், படத்தின் டீசர், டிரைலர் என வரும் போது அவற்றை இன்னும் பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்களாம்.