ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' |
இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுப்பதற்கு முன்பு வேறு படத்தை இயக்க டைரக்டர் ஷங்கர் செல்லக்கூடாது என்று லைகா நிறுவனம் நீதி மன்றத்தில் தடை கோரியது. அதையடுத்து நடந்த விசாரணைக்குப்பிறகு தனி நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
அதன்காரணமாக ராம்சரண் - கியாரா அத்வானியை வைத்த தான் இயக்கும் படவேலைகளை தொடங்கிருக்கிறார் ஷங்கர். அதோடு இந்தபடத்தை செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
ஆனால் இந்த நேரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்து ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்பு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் இருந்து தனி நீதிபதியின் உத்தரவை நகல் இல்லாமல் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதிகளின் அமர்வு,லைகாவின் மேல்முறையீட்டு வழக்கின் மனுவில் தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணை நடத்த பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால் லைகா நிறுவனத்தின் இந்த மேல்முறையீடு மனு குறித்த வழக்கு விசாரணை வரும் போது அதில் வரும் தீர்ப்பை பொறுத்து ஷங்கரின் பிற மொழி படங்களின் விஷயத்தில் மாற்றம் நிகழலாம்.