தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
சினிமாவிலும், சீரியலிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் செந்தில் குமாரியின் எழில் கொஞ்சும் புகைப்படங்கள் நெட்டீசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
பசங்க திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்தவர் நடிகை செந்தில் குமாரி. இவர் தனது குரலாலும், பேசும் ஸ்லாங்கிலும் தனக்கான தனி இடத்தை பிடித்தார். சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தற்போதுவானத்தை போல தொடரில் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீரியல் நடிகர், நடிகைகள் தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதை போலவே செந்தில்குமாரியும் தனக்கான இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். செந்தில்குமாரி பதிவிடும் புகைப்படங்களில் அவர் வயதான நபர் போல் அல்லாமல், இளமையாக பார்ப்பவர் ரசிக்கும் படியான தோற்றத்தில் அழகாக ஜொலிக்கிறார். சினிமாக்களிலும், சீரியலிலும் அம்மாவாகவே பார்த்து பழகிய செந்தில்குமாரி இப்படி இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அழகோடு இருப்பதை பார்த்த நெட்டீசன்கள் இவரா அம்மா! என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.