''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்த விஜய், அதற்கான நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு குறித்து நீதிபதியின் விமர்சனத்துக்கு உள்ளானதோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விஜய்க்கு விதிக்கப்பட்டது. பின் மேல்முறையீடு அபராதத்தில் இருந்து இடைக்கால தடை பெற்றார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் நடிகர் தனுசும் 2018ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வாங்கிய காருக்கு வணிக வரித்துறை ரூ. 60 லட்சத்து 66 ஆயிரம் நுழைவு வரிவிதித்தது. அதையடுத்து அந்த வரியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் தனுஷ். அதோடு,50 சதவிகித வரியை செலுத்தினால் காரை பதிவு செய்யவும் வட்டார போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டிருந்தது வணிக வரித்துத்றை. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையின் போது தனுஷ் தரப்பில் யாரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதியான நாளை அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தனுஷின் வழக்கு விசாரணையில் எந்த மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவத் தொடங்கியிருக்கிறது.