5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கடுத்த மாதத்தில் கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் சென்றார். அங்கு சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்து இந்தியா திரும்பினார்.
தற்போது மீண்டும் சுற்றுலா செல்வதற்கு காஜல் தயாராகிவிட்டார். கடந்த வருடம் ஹனிமூன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒரு வீடியோவாகத் தொகுத்து அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டு, “கடந்த ஆறு வாரங்களாக தினமும் 16 மணி நேரம் கடுமையான வேலை. கவுதம் கிச்சுலுவுடன் ஒரு பிரேக் எடுக்கக் காத்திருக்க முடியாது. விரைவில்,” எனப் பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் தற்போது தமிழில் பஞ்சாயத்தில் இருக்கும் 'இந்தியன் 2' படத்திலும், நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கல் சல்மான் நடிக்கும் 'ஹே சினாமிகா' படத்திலும் நடித்து வருகிறார். சில பல பஞ்சாயத்துகளால் வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கும் 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.